இலங்கையில் விரைவில் உதயமாகும் தமிழ்த் தொலைக்காட்சி- உரிமையாளர் பஷில்?

நாட்டில் மிகவிரைவில் தமிழ்த் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு தொடர்பிருந்த இந்த தமிழ்த் தொலைக்காட்சியை தற்போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அரச தொலைக்காட்சி ஒன்றில் தொழில்புரிந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் விகிக்கின்ற ரிஷாட் பதியூதீனின் கட்சியிலுள்ள ஒருவரே இதற்கான பின்னணிகளை ஏற்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

தற்போது அந்தத் தொலைக்காட்சி பரீட்சார்த்த ஒளிபரப்பை செய்து வருகிறது.

குறிப்பாக சிரச தொலைக்காட்சியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியாக இருந்த லக்ஷபத்தி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், மேற்படி தமிழ்த் தொலைக்காட்சியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக மேலும் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் அந்தத் தொலைக்காட்சி அரசியல் அல்லாமல் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியைப் போல களிப்பூட்டும் மக்களைக் கண்கவரச் செய்யும் நிகழ்ச்சிகளை விருந்துபடைக்கவுள்ளதாக தகவல்.

You May also like