மரணம், மருத்துவமனை நெருக்கடி இதனால்தான்-இரகசியத்தை வெளியிட்ட இராணுவ தளபதி

நாட்டில் கொரோனா நோயாளர்களால் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஏற்படுவதற்கான காரணத்தை இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்தகையுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு தனது படைப்பட்டாளத்துடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை விஜயம் செய்தார்.

இந்நிலையில் திருவிழா ஏற்பாடு மற்றும் அதற்கு ஆசிவேண்டி இராணுவத் தளபதி தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கொரோனா நோயாளர்களால் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்தகையுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் மரணங்களும், நெருக்கடியும் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கோவிட் ஒழிப்பு படையணியை அமைச்சரவை நிர்வகிக்காமல், இராணுவம் நிர்வகிப்பதால்தான் தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தோல்வியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டையும் இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்தார்.

You May also like