தேவைப்பட்டால் நாட்டை முடக்குவோம் – சுகாதார பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு

சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் குழுவிலுள்ளவர்கள் இணங்கினால் பொது முடக்கத்தினை அறிவிக்கலாம் என்று சுகாதார சேவைப்பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

ஆனால் ஓரிருவர் கூறுவதுபோல நாட்டை முடக்க முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தொற்று மற்றும் மாறுபட்ட தொற்றுக்கள் மேலும் வரலாமலிருப்பதற்கான மாற்றுவழிகளில் ஒன்றான பொது முடக்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற விடயம் பட்டியலில் தொடர்ந்தும் இருப்பதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் நாட்டை முடக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

You May also like