கேஸ் தட்டுப்பாடு உக்கிரம்-தடுப்பூசிக்குப் போல நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனை முகவர்களும், மக்களும் தெரிவிக்கின்றனர்.

மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் மட்டுமன்றி நீல நிறமுடைய லிட்டோ சிலிண்டர்களும் போதியளவு வாங்குவதற்கு இல்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் நாட்டின் பல இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

You May also like