பஸ் நிலையத்தில் திடீரென ஒருவர் மரணம்-அருகில் செல்ல பயந்த மக்கள்;கொரோனா இல்லை?

பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனினும் அருகிலிருந்தவர்கள் எவரும் அவரை நெருங்கவோ அல்லது உதவிசெய்யவோ முன்வரவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் 1990 என்கிற அவசர அம்பியூலன்ஸ் உதவி கோரப்பட்டு பண்டாரவளை வைத்தியசாலையில் நபர் சேர்க்கப்பட்ட பின் அன்டிஜன் பரிசோதனையும் நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும் பி.சி.ஆர் பரிசோதனையை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

—வீடியோ கீழே—-

https://www.facebook.com/100010376710897/videos/3095059847445723/

 

 

 

You May also like