பாடசாலை மீளத்திறப்பு பற்றி கல்வி அமைச்சர் இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று மேலும் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்த மாத இறுதியில் மீளத்திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்த அரச பாடசாலைகள் திட்டமிட்டபடி திறக்கப்படாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் 18 வயது தொடக்கம் 30 வயதானவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி இன்னும் இரண்டு வாரங்களின்பின்னர் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று மேலும் தீவரமாக தற்போது பரவி வருவதால் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்தமாத ஆரம்ப வாரத்தில் பாடசாலைகளைத் திறக்க ஏற்கனவே அரசாங்கம் உத்தேசித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் 18 வயது முதல் 30 வயதானவர்களுக்கு இன்னும் இரண்டு வாரங்களின் பின் தடுப்பூசியளிக்க  அரசாங்கம் ஏற்பாடு செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May also like