போட்டித்தடை விதிக்கப்பட்ட 03 இலங்கை வீரர்கள் அமெரிக்காவுக்கு?

தற்காலிகப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவரும் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சுமார் 125000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியானஒப்பந்தத்தில் மூன்று வருடங்களுக்கு அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஷெஹான் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்களும் அண்மையில் நாட்டைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like