மோசமான கட்டத்தில் நாடு – 44 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இன்று வருகை!

கோவிட் தொற்றினால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ள நிலையில், ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க இந்த தகவலை சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று பதிவிட்டிருக்கின்றார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மிகவேகமாக சரிவடைந்துவருவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் சுகாதாரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அத்தோடு விசா நடைமுறைகளையும் தளர்த்தியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

You May also like