பின்வரிசை மொட்டு எம்.பிக்களுடன் பஸில் மந்திராலோசனை

நிதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமாகிய பஸில் ராஜபக்ஷ, பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துள்ளார்.

அதன்படி நாளை புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின் பொதுஜன முன்னணி உறுப்பினர்களுடன் நடத்துகின்ற முதல் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

You May also like