கொரோனாவுக்கு கேகாலை மருத்துவர் பலி

கேகாலையில் பிரபல்யமான மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரதான மருத்துவராகிய டாக்டர் பத்ம ஷாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் அவர் தொற்றுக்கு இலக்காகி கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பலருக்கு இவர் சிகிச்சையளித்திருப்பது இங்குகுறிப்பிடத்தக்கது.

 

You May also like