ஒரு மாதத்திற்கு பொதுமுடக்கம்:அரசாங்கத்திடம் கோரிக்கை

வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொவிட் தொற்றினால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது.

அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.

You May also like