புதிய கட்டுப்பாடுகளுடன் வர்த்தமானி இன்று வருகிறது?

நாட்டில் கொரோனா தொற்றின் உக்கிரம் தாண்டவமாடிவருகின்ற தருணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி புதிய சட்டதிட்டங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் பெரும்பாலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அமைச்சரவை இதற்கான அனுமதியையும் அளித்திருப்பதாகவே தெரியவருகின்றது.

அதற்கமைய, மக்கள் நடமாட்டம், ஒன்றுகூடல், கூட்டங்கள், நிகழ்வுகள் உட்பட பலவிடயங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

You May also like