நாட்டை முடக்குமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை-அரசாங்கம் மௌனம்

நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கும்படி எதிர்கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனதாக அறியமுடிகின்றது.

எனினும் அரச உயர்மட்டம் அவர்களது கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகியன இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றன.

எவ்வாறாயினும் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாட்டை முழுமையாக முடக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like