நாடு முழுதும் மிகவிரைவில் டீசல், பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படலாம்?

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பால்மா தட்டுப்பாடு போல மீண்டுமொரு தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படவிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார்.

அதற்கமைய, மிகவிரைவில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளாகிய சமையல் எரிவாயு, பால்மா ஆகியன இன்று மிகநெருக்கடியாகவே காணப்படுகின்றன. பாரிய தட்டுப்பாடும் நிலவுகின்றது. மக்கள் திரள் திரளாக நின்று வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெறுகின்றனர். இந்நிலையில் வருகின்ற நாட்களில் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார நிர்வாகத்தினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அந்நிய செவாவணி இருப்பு நெருக்கடி தொடர்ந்தும் அவ்வாறே இருந்தால் எரிபொருள் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எரிபொருளுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் மக்கள் எரிபொருள் வரிசையிலும் காத்திருக்க நேரிடும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

You May also like