மிகப்பெரிய இரத்தினக்கல்லுக்கு இவ்வளவு பெறுமதியா?

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இரத்தினக்கல் கொத்தணிக்கு 500 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியிடப்பட்டிருப்பதாக இரத்தினக்கல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து இந்தப் பெறுமதியிடலுக்கமைய தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாகவும், அந்த வகையில் இலங்கையின் ரூபாப் பெறுமதியில் 10000 கோடி ரூபாவுக்கும் மேல் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக விலைக்கு இந்த இரத்தினக்கல் கொத்தணியை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

You May also like