புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண? மேலும் பலருக்கு இடமாற்றம்!

சுகாதார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சராக உள்ள பவித்ரா வன்னியாராச்சி அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

அவருக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சராக தற்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அரசாங்க இணைப் பேச்சாளருமாகிய டாக்டர் ரமேஷ் பத்திரண பெரும்பாலும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அப்பதவிக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியும் மாற்றமடையப் போவதாக குறிப்பிடப்படுகின்றது.

 

You May also like