மாகாண பஸ் பயணம் நிறுத்தப்படுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை நிறுத்துவதற்கு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், திருமண நிகழ்வு, மரணச்சடங்கு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொரோனா தொற்று தீவிரமாகப் பரவியதாக சுகாதாரத்தரப்பினரது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் பொதுப் போக்குவரத்தின் ஊடாகவும் தொற்றுப் பரவலாம். மக்கள் அவதானமாகவே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

You May also like