கேஸ் விலை அதிகரிக்கப்பட்டது

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 363 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1,856 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிய ரக லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற பின்னணியிலேயே, எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like