நாட்டில் மீண்டும் ஊரடங்கா? நாளை முடிவு

நாட்டில் மீண்டும் பொது முடக்கத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? அல்லது கோவிட் பரவலுக்கு மத்தியில் அடுத்த கட்ட தீர்மானம் என்ன என்பது பற்றி நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை மாலை விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.

இதில் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

You May also like