மீண்டும் விருந்தை ஒத்திவைத்தார் கம்மன்பில

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் அமைச்சர்களுக்கு அளிக்கப்படவிருந்த இராவிருந்து இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கம்மன்பில, இந்த விடயத்தை இன்று காலையில் அனைத்து அமைச்சர்களுக்கும் குறுந்தகவல் ஊடாக தெரிவித்திருக்கின்றார்.

அதன்படி 19ஆம் திகதி தலவத்துகொடையிலுள்ள நட்சத்திர விடுதியில் இ்நத இராவிருந்து ஏற்பாடாகியிருந்தது. கடந்த 05ஆம் திகதி நடத்தப்படவிருந்த இந்த விருந்து 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. எனினும் நாட்டில் நிலவிவரும் நிலைமையை கருத்திற்கொண்டு மீண்டும் ஒருமுறை விருந்து வழங்கலை அமைச்சர் ஒத்திவைத்திருக்கின்றார்.

You May also like