செப்டம்பர் 20 வரை நாட்டை முடக்கும்படி கோரிக்கை!

எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நாட்டு மக்களிடையே இன்று மரண அச்சம் உறைந்துபோயிருப்பதாகவும், பொதுமுடக்கத்தை அறிவிக்காவிட்டால் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமற் போகும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

You May also like