21ஆம் திகதி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈபடவுள்ளார் கர்தினால்!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரை நீதி வழங்கப்படாமை காரணமாக விசேட ஊடக அறிக்கை ஒன்றை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கூறியுள்ளார்.

இந்த நிலையில் நீதி கோரும் கறுப்புப் போராட்டமொன்றை வருகின்ற 21ஆம் திகதி சனிக்கிழமை அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ வீடுகளிலும், தேவாலயங்களுக்கு முன்பாகவும் கறுப்பு கொடியேற்றி மேற்கொள்ளும்படியும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

You May also like