பிரதான பத்திரிகை நிறுவனங்களில் நுழைந்தது கோவிட்!

நாட்டில் கோவிட் மற்றும் டெல்டா அச்சுறுத்தல் தலைவிரித்தாடிவருகின்ற சூழ்நிலையில், தற்போது கொழும்பிலுள்ள பிரபல பத்திரிகை நிறுவனங்களிலும் டெல்டா தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சில பத்திரிகை நிறுவனங்களின் சில பிரிவுகளில் தொழில்புரிகின்ற ஊழியர்களுக்கு டெல்டா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பிரிவுகள் மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன், குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனங்களில் அச்சுப் பிரிவில் பல ஊழியர்களும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிகை நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.

You May also like