மாகாண இடையே பொது போக்குவரத்து இன்று முதல் தடை-தடுப்பூசி அட்டையும் கட்டாயம்

அரசாங்கம் மற்றுமொரு அவசர அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்களுக்கு முன் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் அந்த அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்வது தடைசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, சுகாதார நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்புக்களுக்கமைய பொதுமக்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

You May also like