இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கோவிட்!

கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசியல் மட்டத்தில் உள்ள பலருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like