நாடு முடக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் தகவல்!

நாட்டில் முழுமையான முடக்க நிலையை அரசாங்கம் அறிவிக்காது என்று இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று பகல் அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

இதுசார்ந்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றும் சற்று நேரத்தில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

You May also like