நல்லூர் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் (VIDEO/PHOTOS)

நல்லூர் ஆலய வளாகத்தில் முருகனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை ஆரம்பமாகிய நிலையில் நல்லூர் ஆலயத்திற்குள் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை உள்ளவர்கள் மாத்திரமே ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின்உத்தரவில்  பொலிசாரின் பஸ் வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டது  பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டிருந்தது.

நல்லூர் முன் வீதியில் கொடியேற்ற உற்சவத்தினை பார்வையிட கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் வண்டியினை  அகற்றினால் கொடியேற்ற உற்சவத்தினை ஆலயத்தை ஆலய வளாகத்திற்குள் வராது தூரமாக நின்று  பார்க்க முடியும் என போலீசாரிடம் சுகாதார பிரிவினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  பொலிசார் மனிதாபிமான அடிப்படையில் கொடியேற்றம் இடம்பெற்ற நேரத்தில் மாத்திரம் நல்லூர் ஆலய முன் வீதியில் வீதியின் குறுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை  அகற்றி பொதுமக்களுக்கு முருகனின் கொடியேற்ற நிகழ்வினை பார்வையிட அனுமதி வழங்கினர். பின்னர் அவ்விடத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்றுகூடி நின்றால் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த தன் அடிப்படையில் அவ்விடத்தில் கூடிய அனைவரும் கலைந்து சென்றனர்.

நல்லூர் ஆலயத்தை சூழ நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது வழமையாக அமைக்கப்படும் வீதித் தடைகள் போன்று இம்முறையும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு நல்லூர் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டை உள்ளோரும் ஆலய வளாகத்தில் உள்ள நிரந்தர வர்த்தக நிலையங்கள் நிறுவனங்களில் பணிபுரிவோரும் மாத்திரமே நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்தோடு நல்லூர் ஆலயத்திற்குள்  ஆலய நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்பட்டார் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனினும் வீதிகளில் இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பேணி நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

VIDEO: https://www.youtube.com/watch?v=L6QzZSsa5BI

You May also like