இந்திய தூதரகம் மீது தாக்குதலா?ஊடகவியலாளர் ஒருவர் கைது

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று அவர் கைதாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

இந்திய குடியரசு தினம் நாளையாகும்.இந்நிலையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தாக்குதல் இடம்பெற சந்தர்ப்பம் இருப்பதாக செய்தி ஒன்றை அவர் வெளியிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

You May also like