விடுதலைப் புலிச் சந்தேகநபர் மட்டக்களப்பில் கைக் குண்டுடன் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு கட்டளையிட்ட போதிலும் கட்டளையை மீறிச்சென்ற நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  கைக்குண்டு ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்பாடல் பிரிவில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

 

You May also like