05 கோடி ரூபா போதைப்பொருளுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்கரையோரப் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற கேரள கஞ்சா 126 கிலோ கிரோம் மீட்கப்பட்டது.

அத்துடன் 02 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இவற்றின் இலங்கைப் பெறுமதி 50 மில்லியன் (05 கோடி ரூபா) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

You May also like