புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த எதிர்வரும் 17ம் திகதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (15) முதல் மக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

You May also like