கொழும்புக்கு வரவேண்டாம்- உச்சகட்ட அபாய எச்சரிக்கை விடுப்பு

கொழும்பில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவிவருவதால் அத்தியாவசிய காரணத்திற்காக இன்றி கொழும்பு நகருக்கு வெளிமாவட்ட மக்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நகருக்கு வருவது பற்றி ஒருமுறையல்ல, மூன்று முறை சிந்திக்கும்படியும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

You May also like