சுகாதார பிரதிப் பணிப்பாளர் மீண்டும் தனிமைப்படுத்தலில்!

சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான டாக்டர் ஹேமந்த ஹேரத் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கோவிட் தொற்றிற்கு இலக்கான நபர் ஒருவருடன் தொடர்புபட்ட முதன்நிலை தொடர்பாளராக அவர் இனங்காணப்பட்டிருக்கின்ற நிலையிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதற்கு முன்னரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like