பதவி மாற்றப்படும் என எதிர்பார்க்கவே இல்லை- வாய்திறந்தார் பவித்ரா வன்னியாராச்சி!

எதிர்பாராத நிலையில்தான் தனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மாற்றியமைத்தார் என்று முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது  போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சில் இன்று மாலை நடந்த நிகழ்வில் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் நடைபெறும் இப்படியான விடயங்களை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இன்னும் 04 வாரங்களில் தடுப்பூசிப் பணிகளை முழுமைப்படுத்திக் கொண்டால் நாட்டை தற்போதைய பயங்கரமான சூழ்நிலையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

You May also like