இன்று முதல் புதிய முகக்கவசச் சட்டம்;மக்களே.கவனம்!!!

முகக் கவசத்தை அணியாத மற்றும் உரிய வகையில் அணியாதவர்கள் இன்று (16) முதல் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May also like