இலங்கையில் திரிபடைந்த 03 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு

இலங்கையில் வேகமாகப் பரவிவருகின்ற டெல்டா வைரஸின் ஊடாகத் திரிபடைந்த மூன்று தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

‘இலங்கையில் பரவுகின்ற டெல்டா தொற்றின் மேலும் 03 வகையிலான திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. S.A.222-V,  S.A. 701-S, S.A 1078-S என்ற மூன்று திரிபடைந்த தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கும் இந்த திரிவுகளே காரணமாகியிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தடுப்பூசி வழங்கலை வேகப்படுத்தி தொற்று பரவுவதைத் தடுத்தல் மற்றும் மரணங்களைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்த்திருந்தோம். 219 இலட்சம் மக்களில் 119 இலட்சம் மக்களுக்கு அதாவது 54 வீத மக்களுக்கு ஒரு தடுப்பூசியேனும் அளிக்கப்பட்டுவிட்டன. அவர்களில் 46 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசியையும் அளிக்கப்பட்டுவிட்டன. 26 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசியையும் அளித்திருக்கின்றோம். 30 வயதைக் கடந்தவர்களுக்கு 40 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

 

You May also like