கொரோனாவை மறந்து திரிந்த 277 பேர் கைது

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 54,889 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May also like