விரைவில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்ட அவசர அறிவிப்பு

நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் என எரிபொருள் பயன்பாடு குறித்து அவசர அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எரிபொருளை மிகவும் கச்சிதமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும்படியும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“கசப்பான உண்மை என்றாலும் நாம் இருப்பது அந்நிய செலாவணி நெருக்கடியில். 2021 முதல் அரையாண்டில் 18 வீதத்தில் எமது இறக்குமதியானது எரிபொருளுக்காகவே செலவானது. இறுதியான மாதங்களிலும்கூட 25 சதவீதம் செலவாகும். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், அத்தியாவசிய பொருட்களுக்காக தற்போது கைவசமுள்ள அந்நிய செலாவணி இருப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் எரிபொருளை சிக்கனமாகக் கையாளுங்கள்” – இப்படி அமைச்சரது டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரது கூற்றுப்படி நாட்டில் விரைவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகின்றது.

You May also like