புறக்கோட்டை கெய்சர் வீதி LOCKDOWN…!!!

கொழும்பு-புறக்கோட்டை கெய்சர் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது டெல்ட்டா வைரஸ் திரபு வேகமாக பரவிவரும் நிலையில், நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவரும் உள்ள 31 நகரங்களில் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது புறக்கோட்டையிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like