அவசரமாக இன்றுமாலை ஜனாதிபதியை சந்திக்கும் ரணில்-நேற்றும் நீண்டநேரம் பேச்சு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பானது பெரும்பாலும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போதைய கோவிட் நெருக்கடி நிலைமை பற்றி ஜனாதிபதியுடன் நேற்று இரவு ரணில் விக்கிரமசிங்க அவசரமான தொலைபேசியில் கலந்துரையாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே தற்போதைய நிலைமை பற்றி நேரில் சந்திக்க வரும்படி ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

எனினும் இன்று காலை குளியாப்பிட்டிக்கு சென்று, முன்னாள் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்கின்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று மாலை கொழும்புக்குத் திரும்பியதும் ஜனாதிபதியை சந்திப்பார் என “சிறிகொத்த” தகவல்கள் கூறுகின்றன.

You May also like