370 கிலோ மஞ்சள் குற்றிகளுடன் சந்தேக நபர் கிளித்தீவில் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டதாக நம்பப்படும் ஒருதொகை மஞ்சள் குற்றிகளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்னளர்.

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி – கிளித்தீவுக்கு அருகே இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக பயணித்த மீன்பிடிப் படகொன்றை இலங்கை கடற்படை சோதனை செய்தது.

இந்த சந்தர்ப்பத்தில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 370 கிலோ காய்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரையும் கடற்படையினர் கைதுசெய்ததோடு படகையும் பறிமுதல் செய்தனர்.

You May also like