தம்பிக்கு கொரோனா-ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குங்கள்:ஆளுங்கட்சி எம்.பி கோரிக்கை!

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவராகப் பணியாற்றிவரும் தனது சகோதரனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த தெரிவிக்கின்றார்.

ஆகவே குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் பொது முடக்கத்தை அறிவிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

You May also like