ரணிலின் யோசனையை குப்பையில் போட்ட ஜனாதிபதி-தோல்வியில் முடிந்த சந்திப்பு…!!!

(EXCLUSIVE)

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த 21 யோசனைகளில் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிராகரித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க இன்று நண்பகலில் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சு நடத்தியிருக்கின்றார்.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இதுவரை எந்தவொரு ஊடக அறிக்கையும் வெளியிடப்படவல்லை.

குறிப்பாக இந்த சந்திப்பில் 21 யோசனைகளை இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கின்றார் ரணில்.

அதில் விசேடமாக சர்வ கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தும்படி முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி முற்றாக நிராகரித்திருப்பதாக அறியமுடிகின்றது.

இதன் காரணமாக கோவிட் ஒழிப்பு முயற்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு உதவும்படியாக ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாக சிறிகொத்த அதிகாரிகள் Tamil.Truenews.lk செய்தி இணையத்தளத்திடம் கூறினார்கள்.

You May also like