பல்கலை மாணவர் ஒன்றிய உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் மறியல்!

ஆர்ப்பாட்டமொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி, பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அமில சந்தீப மற்றும் கோசல ஹங்சமாலி, முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு இன்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

You May also like