புறக்கோட்டையில் மற்றுமொரு பகுதி தாமாகவே முடங்கியது!

கொழும்பு – புறக்கோட்டை – இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை சில தினங்களுக்கு மூட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் பரவி வரும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, வர்த்தகர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.இரண்டாம் குறுக்குத் தெரு பகுதிக்கு, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகைத் தருகின்றமையினால், அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றமையை கருத்திற் கொண்டே, தாமும் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த பிரதேச வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொழும்பு – கெய்சர் வீதி, கொழும்பு – 12 பகுதியிலுள்ள இரும்பு மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முடப்பட்ட பின்னணியிலேயே, இன்று இரண்டாம் குறுக்குத் தெருவும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like