18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி

இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் திகதியாகும்போது கோவிட் தடுப்பூசியளிக்கின்ற பணிகளை முழுமைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக சீனத்தடுப்பூசிகளில் ஒன்றாகிய சைனோபார்ம் 9 மில்லியன் தடுப்பூசிகளும், பைஸர் வகையிலான 14 மில்லியன் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

You May also like