கண்டி தலதா பெரஹெரவிலும் பலருக்கு கொரோனா உறுதி!

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் இதனிடையே பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பெரஹெர விழாவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 16 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் திருவிழாவில் விஷ்னு விகாரையைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கண்டி – சில்வெஸ்டர் கல்லூரியின் சார்பில் நடனக் கலைஞர்களாகப் பங்கேற்றவர்களில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

You May also like