மங்கள சமரவீர மரணமா? வந்தது உண்மைத் தகவல்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

எனினும் அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும், பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் சாதாரண நோயாளர் வார்ட் அறைக்கு மாற்றப்படுவார் என்றும் மங்கள சமரவீரவுக்கு நெருங்கிய சிலர் தெரிவித்தனர்.

You May also like