உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்தும் அழைத்துவருவேன்-உதயங்க அதிரடி!

யார் என்ன சொன்னாலும் உக்ரைன் சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவருவதை தாம் நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்தே டெல்டா உள்ளிட்ட தொற்றுக்கள் பரவியதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் கோவிட் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்றும் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like