ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை – இன்று தீர்க்கமான பேச்சு

ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில், இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது,

குறித்த கலந்துரையாடலில், அதிபர்,ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து பேசப்படவுள்ளது.

எனினும் இந்த சந்திப்பானது நேற்று நடத்தப்படவிருந்த நிலையில்தான் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகி,  ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று 37 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like